காரிமங்கலத்தில் சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

காரிமங்கலத்தில் சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
X

காரிமங்கலத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள்.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தில் மாநில மைய அறைகூவலுக்கு இணங்க, தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் முதல்வரின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ரீனா தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சி.எம். நெடுஞ்செழியன் விளக்க உரையாற்றினார்.

அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம். சுருளி நாதன், மாவட்ட செயலாளர் ஏ.சேகர் வாழ்த்துரை வழங்கினார்கள். இதில் அமைப்பாளர்கள் மற்றும் சமையலர்கள் சமையல் உதவியாளர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

இறுதியாக ஒன்றிய செயற்குழு உறுப்பினர் அம்பிகா நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!