அண்ணாமலைக்கு அரசியலுக்கு வந்தது உள் நோக்கம்: அமைச்சர் எம் ஆர் கே. பன்னீர்செல்வம்

அண்ணாமலைக்கு அரசியலுக்கு வந்தது உள் நோக்கம்: அமைச்சர் எம் ஆர் கே. பன்னீர்செல்வம்
X

தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்.

ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அண்ணாமலைக்கு அரசியலுக்கு வந்தது உள் நோக்கம் உள்ளதாக அமைச்சர் எம் ஆர் கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் இரண்டு நாட்களாக சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வேளாண்மை மற்றும் உழவர் நலவாழ்வுத்துறை அமைச்சர் எம் ஆர் கே. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

பின்னர் பேசிய அவர், இதுவரை பொதுமக்களிடமிருந்து 18 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டிருக்கின்றன. துறை அதிகாரிகள் மூலம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதற்கு நானும் வரவேற்கிறேன், அவரால் பல நல்ல திட்டங்கள், பொதுமக்களுக்கு கிடைக்கும். அது மக்களுக்கு லாபம் தானே என்றார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாக, பாஜக அண்ணாமலை தெரிவித்திருக்கிறாரே என்ற செய்தியாளர்களின் மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாகத்தான் இருக்கிறது. அரசியல் செய்வதற்காக அப்படி கூறி வருகிறார். உரிய பாதுகாப்பு தமிழகத்தில் உள்ளது.

ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடகத்தி்ல் இருந்தவர் தற்போது தான் தமிழகத்திற்கு வந்துள்ளார்.

ஒரு ஐ பி எஸ் அதிகாரி, இளம் வயது, அப்படியிருக்கும் போது பணியை ராஜினமா செய்து விட்டு அரசியலுக்கு வந்த காரணம் என்ன எதோ உள்நோக்கம் அண்ணாமலைக்கு இருக்கிறது என தெரிவித்தார்.

Tags

Next Story
why is ai important to the future