பாலக்கோடு அருகே ஏரியில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலி

பாலக்கோடு அருகே ஏரியில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலி
X

ஏரியில் மூழ்கி உயிரிழந்த ஹர்சா.

பாலக்கோடு அருகே ஏரியில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கர்நாடகா மாநிலம் பெங்களுரு அருகே ஒசஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சம்பத். பெயிண்டரான இவர், தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே பொம்மனூர் கிராமத்தை சேர்ந்த உறவினர் ராஜா என்பவரின் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்திருந்தார். சம்பத்தின் மகன் மகன் ஹர்சா (வயது 20), டிப்ளமோ பட்டதாரியான இவர், பிளம்பர் வேலை செய்து வந்தார். ஏரியில் மூழ்கி சாவு ஹர்சா நேற்று காலை 8 மணி பொம்மனூர் ஏரியில் குளிக்க சென்றார்.

நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால். குடும்பத்தினர் ஏரிக்கு சென்று பார்த்த போது ஏரியின் கரையில் ஹர்சாவின் செருப்பு மற்றும் உடைகள் இருந்தன. எங்கு தேடியும் கிடைக்காததால் சந்தேமடைந்து ஏரிக்குள் மூழ்கி தேடி பார்த்த போது ஹர்சா நீருக்குள் மூச்சு திணறி இறந்து கிடந்தது தெரிய வந்தது. தகவலறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் உடலை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!