காரிமங்கலம் அருகேபணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

காரிமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடியதாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

காரிமங்கலம் போலீசார் கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் ரோந்து சென்றனர். அப்போது கும்பாரஅள்ளி கிராமத்தில் மாந்தோப்பில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் காரிமங்கலம் பகுதியை சேர்ந்த சிவன் (வயது42), ரவி (38), ஆனந்தா (46), சரவணன் (48), முனிராஜ் (33), ரவி (50) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!