பாலக்கோடு அருகே விவசாயிகளுக்கு ரூ.31.40 லட்சம் பயிர்கடன்

பாலக்கோடு அருகே விவசாயிகளுக்கு ரூ.31.40 லட்சம் பயிர்கடன்
X

பேகாரஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பேகாரஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம் பேகாரஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவரும், தர்மபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவருமான பொண்ணுவேல் தலைமை தாங்கி 53 விவசாயிகளுக்கு நெல், மஞ்சள், குச்சிக் கிழங்கு, பருத்தி மற்றும் சம்பங்கி பூ பயிரிட ரூ.31.40 லட்சம் மதிப்பிலான பயிர் கடன்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சங்க செயலாளர் ரவி, துணை செயலாளர் முருகேசன், சங்க துணைத் தலைவர் பட்டு, இயக்குனர்கள் வையாபுரி, காவேரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு