ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி
X

ஒகேனக்கல் அருவி - கோப்புப்படம்

ஒகேனக்கலில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

காவிரி நீர் பிடிப்பு பகுதி களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 14 ஆயிரம் கன அடி வரை அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து மழையின் அளவு குறைந்த தன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறையத் தொடங்கி கடந்த இரு தினங்களுக்கு முன்பு 11 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

இந்த நிலையில் ஒகேனக்–கல்லில் நேற்று நிலவரப்படி 7,500 கன அடியாக குறைந்த நீர்வரத்து இன்றும் அதே அளவில் நீடித்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து ஒகேனக்கல் மெயின்அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து சென்றது. ஒகேனக்கல்லில் நீர்வரத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 14 ஆயிரம் கனஅடி அளவில் அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் கடந்த பரிசல் இயக்க தடை விதித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்றும் 7,500 கன அடியாக நீர்வரத்து தொடர்ந்து நீடித்து வருவதால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. தீபாவளியையொட்டி இன்று ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் பரிசலில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் எண்ணை மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, காவிரி ஆற்றங்கரையோரம் ஆகிய பகுதிகளில் குளித்தும், அங்குள்ள மீன் கடைகளில் மீன்களை ருசித்தும் மகிழ்ந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!