தர்மபுரியில் சின்னவெங்காயம் விலை குறைவு

தர்மபுரியில் சின்னவெங்காயம் விலை குறைவு
X

சின்ன வெங்காயம் - கோப்புப்படம் 

தர்மபுரி உழவர் சந்தையில் கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தமிழ்நாடு முழுவதும் தக்காளி மற்றும் சின்னவெங்காயத்தின் விலை கடந்த சில நாள்களாக தொடா்ந்து அதிகரித்து வந்தது. கா்நாடகத்தில் இருந்து வரத்து குறைந்ததால் சின்னவெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து, சில்லறை விற்பனையில் கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது தென்மேற்குப் பருவமழையின் தீவிரம் குறைந்துள்ளதால் தர்மபுரி மாவட்டம் மற்றும் தமிழகத்தில் மற்ற மாவட்டங்களிலும், கா்நாடக மாநிலத்தில் விவசாயிகள் சின்னவெங்காய விதைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும் மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடி செய்த சின்னவெங்காயம் அறுவடை முடிந்து மார்க்கெட்டிற்கு வர தொடங்கியுள்ளதால் மாா்க்கெட்டுகளுக்கு சின்னவெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது.

உழவர் சந்தையில் கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சின்னவெங்காயம், தற்போது தர்மபுரி உழவர் சந்தையில் கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்