மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் தமிழ்நாடு அரசின் மாற்றுத்தி றனாளி களுக்கான உரிமைகள் திட்டத்தின் மாவட்ட அளவிலான குழு கூட்டம் மற்றும் தேசிய அறக்கட்டளை உள்ளுர் குழு கூட்டம் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
உலக வங்கி நிதியு தவியுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைகள் புரிவதற்கு, தமிழ்நாடு அரசு மூலம் உரிமைகள் திட்டம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மாற்றுத்தி றனாளிகளுக்கான சேவைகள் முழுமையாக கிடைத்திடும் வகையில் ஒவ்வொரு உட்கோட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் மற்றும் வட்டார அளவில் துணை சேவை மையங்கள் அமைத்து பணிகள் மேற்கொள்ளுதல், சமூக தரசுகளை உருவாக்குதல், திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் மற்றும் முன் மாதரி திட்டங்கள் செயல்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இக்கூட்டத்தில் மாற்றுத்தி றனாளிகள் கணக்கெடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டு, கணக்கெப்பாளர்களுக்கான பயிற்சி கையேடுகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை கள் திட்டத்தின் மூலம் மாற்றுத்திற னாளிக ளுக்கான கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்ப டவுள்ளது எனவும், இப்பணி மகளிர் திட்ட களப்பணியாளர்கள் மூலம் மாவட்டம் முழுவதும் வருகின்ற 29 -ம் தேதி முதல் அடுத்த மாதம் 22-ம் தேதி வரை நகர்பு றத்தில் நடைபெற வுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இக்கணக்கெடுப்பில் ஒரு மாற்றுத்திறனாளியும் விடுபடாமல் கணக்கெடுப்பு பட்டியலில் சேர்க்கும் பொருட்டு, அனைத்துறை அலுவலர்களின் கட்டுப்பாட்டில் உள்ள களப்பணியாளர்கள் மூலம் கணக்கெடுப்பு தொடர்பான தகவலை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், அனைத்து வட்டாரங்களிலும் துணை சேவை மையங்கள் அமைப்பதற்கு ஏதுவாக துணை இயக்குநர் சுகாதார பணிகள் கட்டுபாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள கட்டடங்களில் காலியாக உள்ள கட்டடங்களை வழங்கு மாறும் அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் யசோதா, இணை இயக்குநர் சாந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் ராமதாஸ், தணித்துணை கலெக்டர் நசீர் இக்பால், துணை இயக்குநர் சுகாதார பணிகள் விஜயா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கௌரிசங்கர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம், மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நல அலுவலர் செண்பகவல்லி, மாநில திட்ட மேலாளர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்சி அலுவலர், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள் நலசங்கங்களின் பிரதி நிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu