தருமபுரி மாவட்டத்தில் நாளை (12ம் தேதி) தேசிய மக்கள் நீதிமன்றம்
பைல் படம்.
தருமபுரி மாவட்டத்தில் நேஷனல் லோக் அதாலத் வரும் 12ம் தேதி சனிக்கிழமை அன்று தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷனல் லோக் அதாலத்) நடைபெற உள்ளது.
இதுகுறித்து தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் தலைவருமான திலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக வரும் 12 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷனல் லோக் அதாலத்) நடைபெற உள்ளது.
இதேபோல் மாவடத்தில் உள்ள அரூர், பாலக்கோடு, பென்னாகரம், மற்றும் பாபபிரெட்டிப்பட்டி உள்ளிட்ட நான்கு தாலுகா நீதிமன்ற வளாகத்திலும் நேஷனல் லோக் அதாலத் நடக்க உள்ளது.
காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த லோக் அதாலத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள, சமரசம் செய்து கொள்ள கூடிய மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை மோசடி வழக்கு, வங்கி வாராக்கடன் வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, உரிமையியல் வழக்கு, குடும்ப பிரச்சனை வழக்கு, தொழிலாளர் நல வழக்கு மற்றும் சமரச குற்ற வழக்குகளுக்கு, சமரச முறையில் அன்றைய தினமே தீர்வு காணப்படவுள்ளது.
பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுக்கி முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி, நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ நீதிமன்றங்களில் ஆஜராகி நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள, சமரசம் செய்து கொள்ள கூடிய, மேற்கண்ட பிரிவ வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு வழக்கினை முடித்து கொள்ளலாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu