/* */

தருமபுரி மாவட்டத்தில் மார்ச் 12 ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

தர்மபுரி மாவட்டத்தில் வரும் மார்ச் மாதம் 12ம் தேதி சனிக்கிழமை அன்று தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷனல் லோக் அதாலத்) நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

தருமபுரி மாவட்டத்தில் மார்ச் 12 ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்
X

தர்மபுரி முதன்மை மாவட்ட நீதிபதி / மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத் தலைவர் வி.திலகம் தெரிவித்துள்ளதாவது,

மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக மாண்பமை தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படியும், சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதளின்படியும் மார்ச் மாதம் 12ம் தேதி சனிக்கிழமை அன்று தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷனல் லோக் அதாலத்) நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு வரும் பிப்ரவரி 28-ம் தேதி முதல் மார்ச் 11-ம் தேதி வரை (அனைத்து வேலை நாட்களிலும்) சிறப்பு மக்கள் நீதிமன்ற அமர்வு மதியம் 2 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.

சிறப்பு மக்கள் நீதிமன்ற அமர்வை தொடர்ந்து, தர்மபுரி மாவட்டத்தில் வரும் மார்ச் மாதம் 12-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த லோக் அதாலத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள, சமரசம் செய்து கொள்ள கூடிய மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை மோசடி வழக்கு, வங்கி வாராக்கடன் வழக்கு, தொழிலாளர் நல வழக்கு மற்றும் சமரச குற்ற வழக்குகளுக்கு, சமரச முறையில் அன்றைய தினமே தீர்வு காணப்படவுள்ளது.

பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, நீதிமன்றங்களில் ஆஜராகி நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள, சமரசம் செய்து கொள்ள கூடிய, மேற்கண்ட பிரிவு வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு வழக்கினை முடித்து கொள்ளலாம்.

நீதிமன்றத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் கோவிட்-19 பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 26 Feb 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  2. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  5. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  6. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  7. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  9. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  10. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!