பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை
பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த கூட்டம்
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து அரசு துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், தாழ்வான பகுதிகளின் வழித்தடங்கள், போக்குவரத்து விவரப்பட்டியல், அவரசகால போக்குவரத்து ஊர்திகளின் விவரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். துறை அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகள் பற்றிய விவரப் பட்டியல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மழை வெள்ள காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க ஏதுவாக சமுதாயக்கூடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகள் பற்றிய விவரப்பட்டியல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மழை வெள்ள காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய தேவையான வாகனங்கள், தண்ணீர் டேங்க்குகள், போர்டபிள் ஜெனரேட்டர்கள், டார்ச் லைட்கள், உணவு சமைக்க பாத்திரங்கள், கேஸ் அடுப்புகள், நியாய விலைக்கடைகளில் தேவையான உணவு பொருட்களின் இருப்பு ஆகியன தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
சாலையோர மரங்கள் சேதமடைந்தால் மீட்பு பணிக்கு ஜேசிபி, புல்டோசர், மரங்களை வெட்டும் இயந்திரங்கள், போர்டபில் ஜெனரேட்டர்கள், டார்ச் லைட் நல்ல நிலையில் பராமரித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
சாலைகளில் மழைநீர் தேங்காவண்ணம் முன்கூட்டியே சீர்படுத்த வேண்டும். அணைக்கட்டுகள், ஏரிகளின் கரைப்பகுதியில் தேவையான அளவிற்கு மணல் மூட்டைகளை அடுக்கி தயார் நிலையில் வைக்கவேண்டும்.
அவசரக்காலங்களில் உதவிக்கு அழைக்க சுய உதவி குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பட்டியல், தொலைபேசி எண்கள் பட்டியல் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
நடமாடும் மருத்துவ குழுக்கள், அவர்களின் தொலைபேசி எண் விவரங்கள் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
மழைக்காலம் தொடங்கும் முன்னரே குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கா வண்ணம் தெருச்சாலைகள் சீர்படுத்த வேண்டும், கழிவுநீர்கால்வாய்களை துர்வார வேண்டும்,
தெருக்களில் கொசு ஒழிப்பு மருந்து அடித்தும் குளோரின் பவுடர் தூவியும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் அனைத்து குடிநீர் கிணறுகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அனைத்தும் சுத்தப்படுத்தி தேவையான அளவு குளோரின் பவுடர் கலந்து குடிநீர் விநியோகம் செய்யவேண்டும்.
அனைத்து வீடுகள் மற்றும் அரசு அலுவலக கட்டிடங்கள் அனைத்திலும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கால்நடை உயிர், மனித உயிர் சேதாரம் ஏற்படும் போது உடனடியாக நிவாரண உதவி வழங்க பிரேத பரிசோதனை அறிக்கை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் கால்நடை துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் தேவையான அனைத்து பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை அனைத்து துறை அலுவலர்களும் முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்களும் மழைக்காலங்களில் மிகவும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருப்பதோடு அவசரத் தேவைகள், உதவிகள், பேரிடர் கால வீடு, கால்நடை, மனித உயிரிழப்பு , போக்குவரத்து பாதிப்பு, சேதங்கள் பற்றிய தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க மாவட்ட கட்டுப்பாட்டு மைய கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என கூறினார்
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, வருவாய் கோட்டாட்சியர் கீதாராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நசீர் இக்பால், அனைத்து வட்டாட்சியர்கள் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu