வரத்து குறைவு: தர்மபுரியில் எகிறிய எலுமிச்சம் பழம் விலை

வரத்து குறைவு: தர்மபுரியில் எகிறிய எலுமிச்சம் பழம் விலை
X

பைல் படம்

மழை மற்றும் பனியின் காரணமாக விளைச்சல் குறைந்து வரத்து குறைந்ததால் கிலோ ரூ.126-க்கு விற்பனை

கோடைகாலங்களில் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கப் பொதுமக்கள் எலுமிச்சை பழச்சாற்றை அதிகமாகப் பருகி வருகின்றனர். கடவுள் வழிபாடுகளிலும், சைவ, அசைவ உணவகங்களில் அதிகமாக எலுமிச்சை பயன்படுத்தப்படுகிறது.

வீடுகளிலும் எலுமிச்சை பழம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது பெரும்பாலான டீ பிரியர்கள் பால் கலந்து டீ அருந்துவதை தவிர்த்து விட்டு எலுமிச்சை சாறு கலந்த டீ அருந்துவதால் பிரபலமாக லெமன் டீ விற்பனை செய்யப்படுகிறது. இதனால், எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்து உள்ளது.

பொதுமக்களிடத்தில் எலுமிச்சை பழத்தின் பயன்பாடு அதிகரித்து உள்ளதால் பல மாதங்களாக விலை உயர்ந்துள்ளது. முதல் தரமான பழம் ஒரு கிலோ ரூ.200-க்கும் 2-ம் தரம் ரூ.150-க்கும், 3-ம் தரம் ரூ.126-க்கும் விற்பனையாகிறது. 2 மற்றும் 3-வது தரமான பழங்கள் மட்டும் உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

முதல் தரமான பழங்கள் வெளிச் சந்தைகளுக்கு விற்பனைக்குச் செல்கின்றன. மூன்றாம் தரமான ஒரு எலுமிச்சைபழம் 5 ரூபாயும், இரண்டாம் தரமான ஒரு எலுமிச்சைபழம் 7 ரூபாயும், முதல் தரமான ஒரு எலுமிச்சை 10 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மழை மற்றும் பனியின் காரணமாக விளைச்சல் குறைந்து உள்ளதால் வரத்து குறைந்து உள்ளது. வரும் நாட்களில் உற்பத்தி அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings