கொல்லிமலை அன்னாசி பழம் விற்பனை படு ஜோர்

கொல்லிமலை அன்னாசி பழம் விற்பனை படு ஜோர்
X

தர்மபுரியில் விற்பனை செய்யப்ப்படும் கொல்லிமலை அன்னாசி

தர்மபுரியில் பல பகுதிகளில் கொல்லிமலை அன்னாசி பழம் படுஜோராக விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கொல்லிமலை, ஏற்காடு மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் அதிகபடியாக அன்னாசி பழம் சாகுபடி செயல்படுகிறது. கொல்லிமலையில் விளையும் அன்னாசி உலகின் மிகச் சிறந்தவை என்று கூறப்படுகிறது, மேலும் அவை இனிப்பு, அதிகமான சதை மற்றும் உறுதியான அமைப்புக்காக அறியப்படுகின்றன.

19 ஆம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் காலனி அரசாங்கம் கொல்லிமலை அன்னாசிப்பழத்தில் ஆர்வம் காட்டியது. அரசாங்கம் மலைகளில் பல அன்னாசி தோட்டங்களை நிறுவியது, மேலும் பழங்கள் உலகின் பிற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கின. கொல்லிமலை அன்னாசிப்பழம் விரைவில் பிரபலமடைந்து, தற்போது தமிழ்நாட்டின் முக்கியமான விவசாயப் பொருட்களில் ஒன்றாகும்.

ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நடவு செய்யப்படுகிறது. அதே ஜூன், ஜூலையில் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு வருட பயிரான இவற்றில் பல நன்மைகள் உள்ளதாகவும், அதேபோல் அதிகளவு எடுத்துக் கொண்டால் தீமைகளையும் விளைவிக்கும் என மருத்துவர்களும் இயற்கை மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர்.

பிரேசில், பராகுவே ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டதாகவும். அன்னாசியில் வைட்டமின் ஏ.பி.சி ஆகிய உயிர்ச்சத்துகள் நிறைந்துள்ளதாகவும், பொட்டாசியம், கால்சியம், மினரல்ஸ் போன்ற முக்கியச் சத்துகளும், இதில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர். கொழுப்புச்சத்து குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ள அன்னாசியில் புரதம் மற்றும் இரும்புச்சத்துகளும் உள்ளன. 100 கிராம் அன்னாசிப்பழத்தில் 88 சதவிகிதம் ஈரப்பதமும், 0.5 சதவிகிதம் புரதமும், 10.8 சதவிகிதம் மாவுச்சத்தும் 17 சதவிகிதம் கொழுப்புச்சத்தும் 63 மில்லி கிராம் வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ஆகிய தாது உப்புகளும் நிறைந்துள்ளது.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அன்னாசிப் பழத்தில் நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. மூளைக் கோளாறு, ஞாபகசக்தி குறைவு போன்றவையும் குணமாகும். சிலருக்கு நிற்காமல் தொடர்ந்து விக்கல் வந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் ஒரு சங்கு (பாலாடை) அளவுக்கு அன்னாசிப்பழச் சாற்றில் சர்க்கரை சேர்த்து அருந்தினால் குணமாகும்.

மலச்சிக்கல் தீர இதே கலவையை இரண்டு மடங்கு அதிகமாக அருந்தினால் பிரச்னை நீங்கும். எல்லாரும் விரும்பி உண்ணக்கூடிய அன்னாசி பழமானது அதற்குரிய வேளையிலும், அளவிலும் சாப்பிட்டால்தான் அது உடலிற்கு சக்தியையும், பலனையும் கொடுக்கும். சரியான முறையில் பழங்கள் சாப்பிடும் வகையை முழுவதுமாக அறிந்து கொண்டால், நமக்கு அழகு, நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம், உடலுக்குத் தேவையான சக்தி, மகிழ்ச்சி, மற்றும் சரியான எடையைப் பெறலாம்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த அன்னாசி பழங்களை தற்போது தருமபுரி மாவட்டம் முழுவதும் பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags

Next Story
ai in future agriculture