தர்மபுரி மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட அழைப்பு

தர்மபுரி மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட அழைப்பு
X

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா.

தர்மபுரி மாவட்டத்தில் நாளை 24-ம் தேதி ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுமாறு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிக்கை

தர்மபுரி மாவட்டத்தில் நாளை 24-ம் தேதி ஜெயலலிதா 74-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாள் விழா 24-ம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுவதையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்பு - அன்னதானம் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டுகிறேன்.

தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் பிறந்தநாள் விழாவில் ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, பிரமாண்ட கேக் வெட்டி கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள்., கட்சியின்பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!