வாங்குவோர் எண்ணிக்கை குறைந்ததால் வெல்லம் விற்பனை சரிவு
தீபாவளி பண்டிகை என்றாலே உருண்டை வெல்லத்தை வைத்து வீடுகளில் பலவகையான இனிப்பு வகைகளை செய்து அசத்துவர்.
இந்த தின்பண்டங்கள் செய்வதற்கு சிறந்த முறையில் உருண்டை வெல்லம் தயார் செய்து அதில் இனிப்பு வகைகளை செய்து அசத்தி வந்தனர். இன்றும் பாரம்பரியம் குறையாமல் தர்மபுரி மாவட்டத்தில் பழைய தர்மபுரி, முத்துக்கவுண்டன் கொட்டாய், கட கத்தூர், சோகத்தூர், பாப்பா ரப்பட்டி, பாலக்கோடு, பாப்பி ரெட்டிப்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட பகுதிகளில் கரும்பு உருண்டை வெல்லம் உற்பத்தி செய்வது பிரதான தொழிலாக இருக்கிறது.
இந்தப் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட உருண்டை வெல்லம் உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு உற்பத்தி நிலையத்தில் சுமார் 5 முதல் 10 பேர் வரை பணிபுரிந்து வருகின்றனர்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லம் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் உள்ள மைசூர், மாண்டியா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஆந்திராவிற்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.
ஆயுதபூஜை, தசரா, தீபாவளி, பொங்கல் பண்டிக்கை காலங்களில் உருண்டை வெல்லம் உற்பத்தி அதிகரித்து, விலை உயர்ந்து விற்பனையாகும்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உருண்டை வெல்லம் உற்பத்தி ஆலைகளுக்கு தேவையான கரும்புகள் கர்நாடகா மாநிலத்தில் மாண்டியா, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்து உருண்டை வெல்லம் உற்பத்தி செய்து வந்தனர்.
இந்நிலையில் போதிய வருமானம் கிடைக்காததால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு உருண்டை வெல்லம் உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டது. தற்போது ஒரு சில ஆலைகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது.
இதனால் கடந்த காலங்களில் பொங்கல், தீபாவளி, ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்களில் வெல்லம் உற்பத்தி குறைவாக இருந்ததால் நல்ல விலை கிடைத்து வந்தது.
இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் உருண்டை வெல்லம் உற்பத்தி செய்யும் பணியில் உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்காக உருண்டை வெல்லம் கிலோ ரூ. 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால் பண்டிகைக்கு இரண்டு மாதத்திற்கு முன்பு முன்பதிவுகளும் உற்பத்தியில் தொடங்கும் நிலையில், தற்போது மக்களிடையே வெல்லம் வாங்கி வீடுகளில் இனிப்பு தயாரிக்கும் பழக்கம் குறைந்து.
நேரடியாக கடைகளுக்கு சென்று இனிப்பு வாங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதனால் போதிய அளவு முன்பதிவு கிடைக்காமல் உள்ளது. இதனால் உருண்டை வெல்லம் உற்பத்தியாளர்களுக்கு விற்பனையும் வருவாயும் குறைந்த அளவே இருந்து வருகிறது.
இதனால் இந்த ஆண்டு பண்டிகைக்கு உருண்டை வெல்லத்தின் விலையும் இல்லை, போதிய வருவாய் கிடைக்கவில்லை. இதனால் கரும்பு விவசாயிகளும், உருண்டை வெல்ல உற்பத்தி ஆலைகள் மற்றும் தொழிலாளர் தீபாவளி பண்டிகைக்கான வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu