கே.ஆர்.எஸ்.-கபினி அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கே.ஆர்.எஸ்.-கபினி அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு
X

குண்டடத்தில் ரூ.63 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் விரைவில் துவங்கப்பட உள்ளது. 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ்.-கபினி அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி ஆகிய 2 அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. மைசூரு, குடகு, மாண்டியா, சாம்ராஜ் நகர், ராம் நகர் போன்ற காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

காவிரி பிறப்பிடமான தலைகாவிரியில் நிற்காமல் மழை பெய்தது. இதன்காரணமாக குடகு பகுதியில் காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிபாய்ந்து ஓடியது. தற்போது பெய்த கனமழை காரணமாக மாண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடியில் அணையின் நீர்மட்டம் சற்று உயர்ந்து 82 அடி காணப்பட்டது. அணைக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 13ஆயிரத்து 449 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் மழை சற்று குறைவாக பெய்ததன் காரணமாக இன்று காலை சற்று குறைந்து 11 ஆயிரத்து 695 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து இன்று 289 கனஅடியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மைசூரில் உள்ள கபினி அணையில் 2284 அடி மொத்த கொள்ளளவு கொண்டது. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 2266.40 அடியாக உள்ளது.

இதில் அணைக்கு நீர்வரத்து நேற்று 16 ஆயிரத்து 580 கனஅடி வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை சற்று குறைந்து 13 ஆயிரத்து 453 கனஅடியாக சரிந்து வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு நீர் திறப்பு இன்று 500 கனஅடி அளவில் திறந்து விடப்பட்டது. இரு அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் மொத்தம் 789 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள நீர் திறப்பால், பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக செல்லும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

இதன்காரணமாக ஒகேனக்கல்லில் கடந்த சில நாட்களாக குறைந்த அளவிலான இருந்த நீர்வரத்து நேற்று 700 கனஅடியாக உயர்ந்தது. கே.ஆர்.எஸ். மற்றும் கபினி ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து சற்று குறைந்து 400 கனஅடியாக சரிந்தது.

தொடர்ந்து பிலிக்குண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!