தர்மபுரி மாவட்டத்தில் சட்டமன்ற பொதுக்கணக்குக்குழு தலைவர் ஆய்வு

தர்மபுரி மாவட்டத்தில் சட்டமன்ற பொதுக்கணக்குக்குழு தலைவர் ஆய்வு
X

ஒகேனக்கல்லில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முதலைப்பண்ணையை பார்வையிட்ட சட்டமன்ற பொது கணக்கு குழுவினர்.

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளை சட்டமன்ற பொதுக்கணக்குக்குழு தலைவர் செல்வபெருந்தகை ஆய்வு மேற்கொண்டார்.

தருமபுரி மாவட்டத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற பொதுக் கணக்குக் குழு இன்று வருகைதந்தது. பொதுக் கணக்குக் குழுத் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் குழு உறுப்பினர்கள் தருமபுரி மாவட்டத்திற்கு வருகைதந்து பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள், அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்விற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை செயலாளர் முனைவர். கி.சீனிவாசன் கியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆய்வில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் இக்குழு உறுப்பினர்களான காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செவ்வன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்பூண்டி. கே. கலைவாணன் ஆகியோர் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள், அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொதுக் கணக்குக் குழுவினர் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம், கூத்தப்பாடி ஊராட்சிக்குட்பட்ட ஒகேனக்கல்லில் மீன்வளத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசு மீன் பண்ணை , மற்றும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முதலைப்பண்ணை , தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்பு திட்டத்தின் பிரதான சமநிலை நீர்தேக்கம், பென்னாகரம் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி, பென்னாகரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாப்பாரப்பட்டி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் வேளாண்மை அறிவியல் நிலையம், பாலக்கோட்டில் சர்க்கரைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை, தருமபுரி வட்டம், கடகத்தூரில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கி வரும் கடகத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி கல்லூரி மாணவியர் விடுதி ஆகியவற்றில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள், அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன், மாவட்ட வருவாய் அலுவலர் / தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை (பாலக்கோடு) மேலாண்மை இயக்குநர் ந.சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் (பொ) / திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பாபு, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இராமதாஸ், தருமபுரி வேளாண்மை இணை இயக்குநர் (பொ) முகமது அஸ்லாம், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, உதவி இயக்குநர் (ஊராட்சிகள் ) அ.மாலா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வி.ராஜசேகரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ம.தீபா, தருமபுரி வருவாய் வட்டாட்சியர் தன.ராஜராஜன், பென்னாகரம் வருவாய் வட்டாட்சியர் அசோக்குமார், பாலக்கோடு வருவாய் வட்டாட்சியர் சுகுமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?