தர்மபுரி மாவட்டத்தில் இன்று 418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 418 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

மாவட்டம் முழுவதும் ஏற்கனவே தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 169 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். தற்போது 2128 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 281 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 106 ஆகும். குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 29 ஆயிரத்து 697பேர் ஆகும்.

Tags

Next Story
ai healthcare products