/* */

தர்மபுரியில் வெளுத்து வாங்கிய கனமழை

நேற்று மாலை முதல் தர்மபுரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது.

HIGHLIGHTS

தர்மபுரியில் வெளுத்து வாங்கிய கனமழை
X

தமிழகத்தில் ஜூலை  3ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை, பருவநிலை மாற்றத்தால் காலதாமதமாக தொடங்கியுள்ளது. தமிழகம் கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பருவநிலை மாற்றத்தால் காலதாமதமாக மழை பெய்ய தொடங்கியுள்ளதாகவும் . தமிழகத்தில் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த வாரம் தகவல் தெரிவித்தது.

இந்த நிலையில் கேரளா, கர்நாடகாவில் கன மழை பெய்து வருகிறது. அதன் தாக்கமாக தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. நேற்று மாலை முதல் தருமபுரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷன நிலை நிலவி வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதே போல் நேற்று மாலை முதல் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பரவாக மழை பெய்துள்ளது. மேலும் தர்மபுரி 7 மில்லி மீட்டர், பாலக்கோடு 6.2 மில்லி மீட்டர், மாரண்டஅள்ளி 6 மில்லி மீட்டர், பென்னாகரம் 5 மில்லி மீட்டர், ஒகேனக்கல் 3 மில்லி மீட்டர், அரூர் 27.2 மில்லி மீட்டர், பாப்பிரெட்டிப்பட்டி 18 மில்லி மீட்டர், என மொத்தம் 72.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

Updated On: 11 July 2023 9:19 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  2. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  4. ஆன்மீகம்
    புனிதமான வாழ்க்கையை கொண்டாடும் சந்தோஷமான ரமலான் தின வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. ஈரோடு
    ஈரோடு மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர்...
  7. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  8. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  9. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  10. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்