அரூர் போலீஸ் சப்டிவிஷனில் விதிமுறைகள் மீறல்: 365 பேர் மீது வழக்கு

அரூர் போலீஸ் சப்டிவிஷனில் விதிமுறைகள் மீறல்: 365 பேர் மீது வழக்கு
X

தர்மபுரி மாவட்டத்தில் விதிமுறைகள் மீறிய வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து அறிவுரை வழங்கிய போலீசார்.

அரூர் போலீஸ் சப்டிவிஷனில் விதிமுறைகளை மீறியதாக 365 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15 ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைசெல்வன் உத்தரவின் பேரில், அரூர் போலீஸ் டி.எஸ்.பி. பெனாசிர் பாத்திமா மேற்பார்வையில் அரூருக்கு உட்பட்ட, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, மொரப்பூர், அரூர், கோபிநாதம்பட்டி, கம்பைநல்லுார் உள்ளிட்ட ஸ்டேஷன் மற்றும் போக்குவரத்து போலீசார் இன்று தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, முகக்கவசம் அணியாத, 42 பேரும், ஹெல்மெட் அணியாமல் சென்றது, ஓட்டுனர் உரிமம் இல்லாது பைக் ஓட்டி சென்ற 323 பேர் என மொத்தம் 365 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து கொரோனோ விதிமுறைகள் கடைபிடிக்க போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு