அரூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

அரூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்
X

மாதிரி படம் 

அரூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வேடகட்டமடுவில் செல்லும் தெண்பெண்ணை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதபதாக கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் இன்று காலை கொடுத்த தகவலின் பேரில் கோட்டப்பட்டி போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர் .

கடந்த சில நாட்களாக மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது இந்த தண்ணீரில் யாரேனும் கிராம மக்கள் அடித்து செல்லப்பட்டு இருந்தார்களா அல்லது கொலை செய்யப்பட்டு ஆற்றில் தூக்கி வீசப்பட்டனர் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடல் மிகவும் அழுகிய நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது அந்த சடலத்தை மீட்கும் பணியில் கோட்டப்பட்டி போலீசார் வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இறந்தவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்