அரூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: பாட்டி, பேரன் உயிரிழப்பு

அரூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: பாட்டி, பேரன் உயிரிழப்பு
X

பைல் படம்.

அரூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் பாட்டி மற்றும் பேரன் உயிரிழந்தனர்.

அரூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் பாட்டி, பேரன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகேயுள்ள கேத்துரெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சக்திவேல் மனைவி குமார்த்தி (37). இந்த தம்பதியின் மகன் சந்தேஷ் (22). அரூரை அடுத்த செல்லம்பட்டி புதூரில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு குமார்த்தி, அவரது மகன் சந்தோஷ், மாமியார் சின்னம்மாள் ஆகிய மூவரும் சென்றுள்ளனர். கோயில் விழா முடிந்த பிறகு, தமது வீட்டிற்கு செல்வதற்காக மூவரும் இருசக்கர வண்டியில் அரூர்}சிந்தல்பாடி சாலையில் சென்றுள்ளனர். இருசக்கர வண்டியை இளைஞர் சந்தோஷ் ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது செல்லும் வழியில் அள்ளாளப்பட்டி எனுமிடத்தில் சாலையின் வளைவான பகுதியில், எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில், இளைஞர் சந்தோஷ் (22), அவரது பாட்டி சின்னம்மாள் (55) ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மற்றொரு இருசக்கர வண்டியை ஓட்டி வந்த பெத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தீத்து மகன் விஜய் (25), சக்திவேல் மனைவி குமார்த்தி (37) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, காயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, இருவரும் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அரூர் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!