டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு அரூரில் அமமுகவினர் அன்னதானம் வழங்கல்

டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு அரூரில் அமமுகவினர் அன்னதானம் வழங்கல்
X

டிடிவி தினகரனின் பிறந்த நாளை மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து பின்பு பேருந்து நிலையத்தில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர்.

அரூரில் அமமுக பொது செயலர் டிடிவி தினகரன் பிறந்தநாளில் சிறப்பு பூஜை செய்து முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டனர்.

அரூரில் அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் பிறந்தநாளில் சிறப்பு பூஜை செய்து, முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டனர்.

தர்மபுரி மாவட்டம் அரூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகதின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்த நாளை மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து பின்பு பேருந்து நிலையத்தில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர்.

மேலும் அக்ரஹாரத்தில் உள்ள லிட்டில் ட்ராப்ஸ் முதியோர் இல்லத்தில் டிடிவி தினகரன், நலமோடும் வளமோடும் நீண்ட ஆயுளோடு வாழ பிரார்த்தனை செய்து, பிறந்தநாள் வாழ்த்து பாடல்கள் பாடி வாழ்த்துக்கள் கூறினர். மேலும் 106 ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் டி.கே ராஜேந்திரன், மாநில அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஆர்.ஆர். முருகன், மற்றும் ஏராளமான அமமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்