அரூரில் கஞ்சா கடத்த முயன்ற 3 பேர் கைது: 16 கிலோ கஞ்சா பறிமுதல்

அரூரில் கஞ்சா கடத்த முயன்ற 3 பேர் கைது: 16 கிலோ கஞ்சா பறிமுதல்
X

ஆந்திராவில் இருந்து கேரளா கடத்த முயன்ற 16 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 இளைஞர்களை அரூரில் காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆரூரில் கஞ்சா கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தருமபுரி மாவட்டம் அரூரில் தீபாவளி பண்டிகையையொட்டி குற்றச்செயல்களை தடுப்பதற்காக அரூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பெனாசிர் பாத்திமா மற்றும் குற்றப்பரிவினர் போலீசார் பேருந்து நிலையம், மஜித் தெரு, ரவுண்டானா, 4 ரோடு, பழையபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது பழையபேட்டை பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் மூன்று இளைஞர்கள் ஒரு பையுடன் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களை விசாரிக்க அழைத்தபோது, தப்பிக்க முயன்ற இளைஞர்களை போலிசார் சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்தனர். விசாரிக்கும் பொழுது தாங்கள் ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு செல்வதாக தெரிவித்துள்ளனர்.

அப்போது அவர்கள் வைத்திருந்த பையை சந்தேகத்தின் அடிப்படையில் பிரித்து பார்க்குபோது அதில் 2 கிலோ பொட்டலம் கொண்ட 8 கஞ்சா பாக்கெட்டுகள் இருந்துள்ளது. அவர்களை கையும் களவுமாக பிடித்தனர், பின்பு அரூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் மூவரும் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த நவாஸ், முகமது யாசில், முகமது ஆசாத் என தெரியவந்தது. மூன்று பேரும் அரூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 16 கிலோ எடை கொண்ட கஞ்சா பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!