அரூர் அருகே செட்டப் பாக்ஸ், கேபிள் ஒயர்கள் திருட்டு: 3 பேர் மீது போலீசார் வழக்கு

அரூர் அருகே செட்டப் பாக்ஸ், கேபிள் ஒயர்கள் திருட்டு: 3 பேர் மீது போலீசார் வழக்கு
X

பைல் படம்.

அரூர் அருகே செட்டப் பாக்ஸ், கேபிள் ஒயர்கள் திருடியதாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஆவலுாரைச் சேர்ந்தவர் நெடுஞ்செழியன், வயது .42, இவர், சிபிராஜ் கேபிள் நெட்ஒர்க் என்ற நிறுவனத்தை கடந்த, 12 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

மல்லிகாபுரம், உட்டப்பட்டி, செங்கலேரி உள்ளிட்ட ஆறு கிராமங்களில் கேபிள் இணைப்பு வழங்கியுள்ளார். கடந்த மார்ச் 18ந்தேதி, குள்ளனுாரில் சத்யா என்பவரது வீட்டில் டிவியுடன் இணைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான செட்டாப்பாக்ஸ் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் வீட்டிற்கு வெளியே இருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கேபிள் ஒயர்கள் திருடு போனது.

இது குறித்து நெடுஞ்செழியன் கோட்டப்பட்டி போலீசில் புகார் செய்தார் . புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நரிப்பள்ளியை சேர்ந்த மதியழகன், வயது 45, கார்த்திக், வயது 27, மற்றும் அவர்களது உறவினர் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.

Tags

Next Story
திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா: நாமக்கலில் சிறப்பு கருத்தரங்கம்