தீர்த்தமலையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

தீர்த்தமலையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
X
தருமபுரி மாவட்டம், அரூர் தொகுதிகுட்பட்ட தீர்த்தமலையில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி திடிரென்று ஆய்வு மேற்கொண்டார்.

தருமபுரி மாவட்டம், அரூர் தொகுதிகுட்பட்ட தீர்த்தமலையில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி திடிரென்று ஆய்வு மேற்கொண்டார்.

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் அனைத்து இடங்களையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து வருகிறார். குடிநீர் மற்றும் சுகாதாரம் குறித்து பொதுமக்களிடம் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார்.

அந்த வகையில் இன்று தீர்த்தமலை ஊராட்சி குரும்பட்டி கிராமத்தில் உள்ள சாலை பணிகளை ஆட்சியர் திவ்யதர்ஷினி ஆய்வு செய்தார். அப்போது அந்த கிராமத்தில் சாலை வசதிகள் மற்றும் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்டவைகளை ஊராட்சி மன்ற தலைவரிடம் ஆலோசனை நடத்தினார். ஆட்சியர் நேரடியாக கிராம மக்களிடம் குறைகளை கேட்க வருவது அனைத்து அதிகாரிகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்கி வருகிறார் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story