அரூரில் 22 இடங்களில் காய்ச்சலை கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது

அரூரில் 22 இடங்களில் காய்ச்சலை கண்டறியும்  சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
X

 அரூரில் இன்று நடைபெற்ற  சிறப்பு முகாமில், காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, 22 கிராமங்களில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடந்தது.

தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதி, கட்டுப்படுத்தப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், வட்டார மருத்துவக்குழு சார்பில், எச்.ஈச்சம்பாடி, பறையப்பட்டி, செல்லம்பட்டி, குழுமிநத்தம், வாச்சாத்தி, சென்றாயம்பட்டி, மேல்தண்டா உள்ளிட்ட 22 இடங்களில், இன்று சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில், மருத்துவக்குழுவினர் சளி, காய்ச்சல், இருமல், தலைவலி, உடல்வலி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் வெப்பநிலை, உடலில் உள்ள ஆக்சிஜன் அளவு உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.

Tags

Next Story