ராமதாஸ் பிறந்தநாள்; தர்மபுரியில் விவசாயிகளுக்கு மரக்கன்று

ராமதாஸ் பிறந்தநாள்; தர்மபுரியில் விவசாயிகளுக்கு மரக்கன்று
X

விவசாயிகளுக்கு மரக்கன்று வழங்கிய பாமக.,வினர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்த தினத்தை தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு மரக்கன்று கொடுத்து கொண்டாடப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் 83-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி , தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொல்லாபுரிஅம்மன் கோவில் அருகே பிறந்தநாள் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தர்மபுரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர, உழவர் பேரியக்கம் மாநில செயலாளர் வேலுச்சாமி பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். பாமகவினர் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

மேலும், பொதுமக்களுக்கு வேட்டி ,சேலை உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கியும் தென்னை மா போன்ற மரக்கன்றுகளை பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முருகன் செய்திருந்தார். கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் அரசாங்கம் இமயவரம்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!