34 ஆண்டுகளாக மாற்றப்படாத மின்கம்பங்களை சரி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை
34 ஆண்டுகளாக மாற்றப்படாத மின்கம்பங்கள் சரி செய்து தரக்கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை
தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் செட்டிப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்டது எம்எஸ் பட்டி கிராமம் இங்கு அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள் 1988ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது அன்று முதல் இன்று வரை இந்த மின்கம்பங்கள் புதுப்பிக்க படாமல் உள்ளன சுமார் முப்பத்தி நான்கு ஆண்டுகளாக மின்கம்பங்களை புதுப்பிக்காமல் உள்ளனர். இதுகுறித்து கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது: பலமுறை மின்சார துறை அலுவலகத்திலும், பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான பலனும் இல்லை மேலும் பஞ்சாயத்து நிர்வாகம் எங்களது கிராமத்தை புறக்கணிக்கப்படுவதாக தெரிகிறது.
பலமுறை முறையிட்டும் புகார் அளித்தும் அரசிடமிருந்து நிதி உதவி வரவில்லை என தெரிவிக்கின்றனர் மேலும் இப்பகுதியில் சிறுவர்-சிறுமியர் விளையாடுகின்றனர். பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால் எந்த நேரத்திலும் அசம்பாவிதம் நடக்கலாம் என்று அச்சம் நிலவுகிறது மேலும் இதே போன்று 4 மற்றும் 5 மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன இப்பகுதியில் புதிதாக மின் கம்பங்கள் மாற்ற ஐந்து கம்பங்கள் கொண்டு வந்து இறக்கி சுமார் ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை புதிதாக மாற்றப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu