மொரப்பூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: பணி ஆணை வழங்கிய எம்எல்ஏ

மொரப்பூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: பணி ஆணை வழங்கிய எம்எல்ஏ
X

மொரப்பூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி ஆணை வழங்கிய எம்எல்ஏ சம்பத்குமார்.

மொரப்பூரில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் எம்எல்ஏ வே.சம்பத்குமார் பணி ஆணை வழங்கினார்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில், வேலை வாய்ப்புகள் இல்லாத இளைஞர்களுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் நோக்கில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் 18 வயது நிரம்பிய 8 ஆம் வகுப்பு நிறைவு செய்தவர்கள், ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், பொறியியல் பட்டதாரிகள் உள்பட ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். இதில், 500 க்கும் மேற்பட்டோருக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

இந்த முகாமில் வேலை கிடைத்த இளைஞர்களுக்கு தருமபுரி கூடுதல் ஆட்சியர் இரா.வைத்திநாதன், அரூர் எம்எல்ஏ வே.சம்பத்குமார், கோட்டாட்சியர் வே.முத்தையன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது