போக்குவரத்து விதிகளை மீறியதாக 349 பேர் மீது போலீஸார் வழக்கு

போக்குவரத்து விதிகளை  மீறியதாக 349 பேர் மீது போலீஸார் வழக்கு
X
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் போக்குவரத்து விதமீறல்களில் ஈடுபட்டதாக வாகன ஓட்டிகள் மீது 349 வழக்குகள் பதிவுசெய்தனர்

போக்குவரத்து விதிகளை மீறியதாக 349 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்டம், அரூர் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட, மொரப்பூர், அரூர், கோபிநாதம்பட்டி, கம்பைநல்லுார், கோட்டப்பட்டி உள்ளிட்ட ஸ்டேஷன் மற்றும் போக்குவரத்து போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மொபைல்போனில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டிய எட்டு பேர், ஹெல்மெட் அணியாமல் சென்ற 202 பேர், அதிவேகம் உள்பட போக்குவரத்து விதி மீறிய மொத்தம், 349 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்,

Tags

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!