ஆண்டு வரி செலுத்தாத போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு
தர்மபுரி மாவட்டம் அரூரில் ஆண்டு வரி செலுத்தாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
ஜே.சி.பி., கிரேன், டிராக்டர், கம்பரசர் மற்றும் ரிக் போன்ற போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அபராதமின்றி ஆண்டு வரி செலுத்த, கடைசி நாளாக ஏப்ரல் 10-ம் தேதி வரை தமிழக அரசால் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் மேற்கண்ட வாகனங்கள் விதி மீறி வரி வரிசெலுத்தாமல் இயக்குப்படுவதாக தெரியவந்ததை அடுத்து, தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் மற்றும் அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-1 சிவக்குமார் ஆகியோர் அரூர் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டதில், வரி செலுத்தாமல் விதி மீறி இயக்கிய 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வாகன உரிமையாளரிடம் வரி ரூ.2,72,900/- மற்றும் இணக்கக் கட்டணம் ரூ.12,200/ வசூலிக்கப்பட்ட பின் வாகனம் விடுவிக்கப்பட்டது.
மேலும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஜே.சி.பி. கிரேன், டிராக்டர், கம்பரசர் மற்றும் ரிக் வாகன உரிமையாளர்கள், உரிய நிலுவை வரியினை உடனடியாக செலுத்தமாறும், மீறும்பட்சத்தில் வாகனங்கள் சிறைபிடிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu