மாணவியை கடத்திய வழக்கில் ஓராண்டுக்குப்பின் வாலிபர் போக்சோவில் கைது

மாணவியை  கடத்திய வழக்கில் ஓராண்டுக்குப்பின் வாலிபர் போக்சோவில் கைது
X

பைல் படம்.

அரூர் அருகே பள்ளி மாணவியை கடத்திய வழக்கில் ஓராண்டுக்குப்பின் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோட்டப்பட்டி வேலனூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி. இவரை கடந்த 2020 நவம்பர் மாதம் பொபசுமரத்துவளவு பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் அயப்பன் (வயது 27) என்பவர் கடத்திச் சென்றார்.

மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் மாணவி வீடு திரும்பினார். மாணவியை கடத்திய அயப்பன் ஓராண்டாக தலைமறைவாக இருந்தார்.

நேற்று கோட்டப்பட்டி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது, ஐயப்பன் அவரது கிராமத்திற்கு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு