பாப்பிரெட்டிப்பட்டி அருகே மாற்றுக்கட்சியினர் 50 பேர் அதிமுகவில் இணைவு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மாற்றுக்கட்சியினர் 50 பேர் அதிமுகவில் இணைவு

அ.ம.மு.க வேட்பாளர் உள்ளிட்ட 50 பேர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே அமமுக வேட்பாளர் உள்பட 50 பேர் மாற்றுக்கட்சியிலிருந்து விலகி அதிமுக.,வில் இணைந்தனர்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி யூனியன் அதிகாரப்பட்டியில் இடை தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க வேட்பாளர் ஜெயராமன் தலைமையில் 50 பேர் மாற்று கட்சிகளில் இருந்து விலகி முன்னாள்அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட பொருளாளர் நல்லத் தம்பி, ஒன்றிய கழக செயலாளர்கள் விஸ்வநாதன், மதிவாணன், சேகர், பொம்மிடி ஊராட்சி மன்ற தலைவர் சி.எம்.ஆர்.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story