அரூர் அருகே 5 பள்ளிகளை சேர்ந்த 1350 மாணவர்களுக்கு ரூ10 லட்சத்தில் உதவி
X
தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
By - Ananthan, Reporter |19 April 2022 10:45 AM IST
அரூர் அருகே 5 பள்ளிகளை சேர்ந்த 1350 மாணவர்களுக்கு கிரானைட் நிறுவனம் மூலம் ரூ 10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்
அரூர் அருகே 5 பள்ளிகளை சேர்ந்த 1350 மாணவர்களுக்கு தனியார் கிரானைட் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ய ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை எம் பி செந்தில்குமார் வழங்கினார்.
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் உள்ள தனியார் கிரானைட் நிறுவனம் தலைவர் முத்து ராமசாமி ஆண்டுதோறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இன்று அரூர் பகுதியில் உள்ள பொன்னேரி, எல்லப்புடையாம்பட்டி, கெலாப்பாறை, தாதம்பட்டி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட ஐந்து அரசு பள்ளிகளை சேர்ந்த 1350 மாணவ-மாணவிகளுக்கு புத்தகப்பை, தமிழகராதி, ஜியோமெட்ரி பாக்ஸ், எழுதுகோல், அளவுகோல், நோட்டு, புத்தகம் மற்றும் பள்ளிகளுக்கு பீரோ, மாணவர்கள் அமருவதற்கான டேபிள் என 10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் முத்தையன், அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் பெனாசீர் பாத்திமா உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu