மொரப்பூரில் கிராமிய கலைஞர்கள், திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணம்
மொரப்பூரில் திருநங்கைகள், கிராமிய கலைஞர்களுக்கு தனியார் அறக்கட்டளை கொரோனா நிவாரண பொருட்களை வழங்கியது.
தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் எண்ணங்களின் சங்கமம் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் கொரோனா பொதுமுடக்கத்தால் வேலை மற்றும் வருவாய் இன்றி தவிக்கும் கிராமிய கலைஞர்கள், திருநங்கைகள் உள்ளிட்ட108 பேருக்கு 10 கிலோ, அரிசி மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை நிவாரணமாக வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னதாக கிராமிய இசைக் கலைஞர்களும், கிராமிய நாடகக் கலைஞர்களும் கொரோனா குறித்து விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், தப்பட்டை குழுவினர் விழிப்புணர்வு பாடல்களை பாடி நடனம் ஆடினார். அதேபோல் தெருக்கூத்து கலை மூலம், நாடக கலைஞர்கள் நடித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu