மொரப்பூர் அருகே தொழிலாளி திடீர் மாயம்; போலீசார் விசாரணை

மொரப்பூர் அருகே தொழிலாளி திடீர் மாயம்; போலீசார் விசாரணை
X

மொரப்பூர் அருகே மாயமான தொழிலாளி ராஜேந்திரன்

மொரப்பூர் அடுத்த தாசரஹள்ளியை சேர்ந்த காணாமல் போன கூலித்தொழிலாளி ராஜேந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த தாசரஹள்ளியை சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது 51. கூலித்தொழிலாளியான இவருக்கு மாதம்மாள் என்ற மனைவியும் கமலநாதன் என்ற மகனும் உள்ளனர். ராஜேந்திரனுக்கு தினமும் குடிப்பழக்கம் உள்ளது.

இந்நிலையில், கடந்த மாதம் 15ஆம் தேதி வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற ராஜேந்திரன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது மனைவி மாதம்மாள் மொரப்பூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
புதிய AI - யுடன்  உங்க Bussiness - ஐ வெற்றியை நோக்கி கொண்டு செல்லலுங்கள்!