கம்பை நல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை: போலீசார் விசாரணை

கம்பை நல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை: போலீசார் விசாரணை
X

கம்பைநல்லூர் திருட்டு நடந்த வீட்டில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கம்பை நல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒரு கிலோ வெள்ளி,3 பவுன் தங்க நகை, பணம் கொள்ளை: போலீசார் விசாரணை

கம்பை நல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒரு கிலோ வெள்ளி,3 பவுன் தங்க நகை, பணம் கொள்ளை: போலீசார் விசாரணை.

தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்த அண்ணாமலைப்பட்டியை சேர்ந்த வெங்கடேசன், (வயது .51) கிருஷ்ணகிரியிலும், சென்னையன், (வயது 45) மதுபாலாஜி, (வயது 40) ஆகியோர் சென்னையில் குடும்பத்துடன் தங்கி ஜவுளி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை, சென்னையன், வெங்கடேசன், மதுபாலாஜி ஆகிய, மூன்று பேரின் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து கிராமமக்கள் அளித்த புகார்படி, சம்பவ இடத்திற்கு வந்த கம்பைநல்லுார் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், தர்மபுரியில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இதில், வெங்கடேசன் தனது வீட்டினுள் சென்று பார்த்தபோது, ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள், மூன்று-பவுன் தங்க நகை மற்றும், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, மூன்று-பட்டு புடவைகள் திருட்டு போனது தெரிந்தது.

சென்னையன் மற்றும் மதுபாலாஜி சென்னையிலிருந்து வந்த பின்பே, அவர்களது வீட்டில் திருடு போன பொருட்கள் விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த திருட்டால் கிராமமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி