பாப்பிரெட்டிபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை.

பாப்பிரெட்டிபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை.
X

பைல் படம்.

அரூர், பாப்பிரெட்டிபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை.

வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பரவலாக அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. தொடர்ந்து இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்து வந்தது. தொடர்ந்து தருமபுரி, அரூர், தீர்த்தமலை, டி.ஆண்டியூர், நரிப்பள்ளி, பாப்பிரெட்டிப்படடி, பொம்மிடி, மெணசி, பூதநத்தம், பொ.துரிஞ்சாபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வந்தது.

தொடர்ந்து கடந்த 2 மாதமாக தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
ai problems in healthcare