அரூர்: தக்காளி விலை வீழ்ச்சியால் மீனுக்கு போடும் அவலம்.!
தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகரிப்பால், ஒரு கிலோ தக்காளி 2 முதல் 3 ரூபாய் விற்கப்படுகிறது. விலை குறைவால் மீனுக்கு உணவாக போடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, இண்டூர், பாப்பாரப்பட்டி, சோமனஅள்ளி, பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதே போன்று அரூர் பகுதிகளில் தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளது. இதனால் 27 கிலோ கொண்ட பெட்டி ரூ.75 முதல் 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் கம்பைநல்லூர், பாலவாடி, பாப்பாரப்படி பகுதிகளில் தக்காளியை பறிக்காமல் விவசாயிகள் தோட்டத்திலேயே விட்டுவிட்டனர்.
அதே போன்று தக்காளி கிலோ 3 ரூபாய் விற்கப்படுவதால், ஏரிகளில் வளர்க்கப்படும் மீனுக்கு உணவாக அளித்து வருகின்றனர். சிலர் தக்காளியை சாலைகளில் வீசிவிட்டு செல்லும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. இது பற்றி விவசாயிகள் கூறும்போது, ஒரு ஏக்கர் தக்காளி பயிர் செய்தால் குறைந்தது 1 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் தற்போது 10 ஆயிரம் ரூபாய் கூட எடுக்க முடியவில்லை என்று வேதனையுடன் கூறுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu