சாலையை கடக்க முயன்ற மான் விபத்தில் சிக்கி பலி

சாலையை கடக்க முயன்ற மான் விபத்தில் சிக்கி பலி
X
அரூர் அருகே, சாலையை கடக்க முயன்ற போது வாகனம் மோதி மான் உயிரிழந்தது.

தருமபுரி மாவட்டம், அரூர் சுற்றியுள்ள காடுகளில் மான், காட்டெறுமை, மயில், பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவு உள்ளன. இவை, காடுகளை விட்டு எதிரெ உள்ள காடுகளுக்கு அவ்வப்போது கடக்க முற்படும்போது, வாகனங்களில் அடிப்பட்டு இறக்க நேரிடுகிறது.

இந்நிலையில், அரூர் சிந்தல்பாடி சாலையில் குரங்கு பள்ளம் அருகே சாலையை கடக்க முயன்ற மான் ஒன்று, வாகனத்தில் மோதி இறந்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்த வனத்துறையினர், உயிரிழந்த மானை அப்புறப்படுத்தினர்.

வனத்துறை ஊழியர்கள் கூறும்போது, காடுகளில் பயணிக்கும் வாகனங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் பயணங்கள் மேற்கொண்டால் வனவிலங்குகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது. எனவே வேகமாக செல்பவர்கள் வனவிலங்குகளின் நலன் கருதி, மெதுவாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story