/* */

அரூர்: 3200 மூட்டை பருத்தி ரூ.65 இலட்சத்திற்கு ஏலம்

தருமபுரி மாவட்டம், அரூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், 3200 மூட்டை பருத்தி ரூ.65 இலட்சத்திற்கு ஏலம் போனது.

HIGHLIGHTS

அரூர்: 3200 மூட்டை பருத்தி ரூ.65 இலட்சத்திற்கு ஏலம்
X

தருமபுரி மாவட்டம் அரூர் கூட்டுறவு வேளாண்மை விற்பனை கடன் சங்கத்தில் வாரந்தோறும், திங்கட் கிழமைகளில் பருத்தியும், வியாழக்கிழமை கொப்பரை தேங்காயும், வெள்ளிக்கிழமைகளில் மஞ்சளும் ஏலம் விடப்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் பயிரிடப்படும் பருத்தி, மஞ்சள் மற்றும் கொப்பரை தேங்காய்களை எடுத்து வந்து விற்பனை செய்து விட்டு பணத்தை பெற்று செல்கின்றனர்.

இதில் அரூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த விவசாயிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் எடுத்து வந்த 3200 பருத்தி மூட்டை ரூ.65 இலட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இதில் ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால், வர லட்சுமி (டிசிஎச்) ரகம் ரூ.6669 முதல் ரூ.7529 வரையில் ஏலம் போனது.

கடந்த வார்ததை விட, விவசாயிகள் வரத்து குறைந்து இருந்தது. ஆனால் பருத்தி வரத்து அதிகரித்தாலும், வாரத்தை விட விலையும் குறைந்து விற்பனையானது. கடந்த வாரம் 3000 மூட்டை பருத்தி ரூ. 75 இலட்சத்திற்கு விற்பனையான நிலையில், நேற்று 3200 மூட்டை பருத்தி ரூ.65 இலட்சத்திற்கு ஏலம் போனது.

Updated On: 13 July 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்