அரூரில் பைக் மீது அரசு பஸ் மோதி விபத்து; பள்ளி மாணவன் பரிதாப பலி

அரூரில் பைக் மீது அரசு பஸ் மோதி விபத்து; பள்ளி மாணவன் பரிதாப பலி
X

அரூரில் அரசு பஸ் மோதி பலியான மாணவன் கன்னியப்பன்.

அரூரில், பைக் மீது அரசு பஸ் மோதி மாணவன் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரூர் அடுத்த முத்தானுாரைச் சேர்ந்தவர் கண்ணியப்பன்,வயது. 16, இவர், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார். இன்று மாலை தனது பைக்கில் கன்னியப்பன் நான்குரோடு நோக்கி சென்றார்.

அரூர்–சேலம் பைபாஸ் சாலையில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே, பின்னால் கோவையில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்ற அரசு பஸ் பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த கண்ணியப்பனை அக்கம், பக்கத்தினர் மீட்டு, 108 அவசர கால ஆம்புலன்ஸ் வாகனம் மூலம், அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து கண்ணியப்பனின் தந்தை சண்முகம் அரூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு