'ரிஸ்க்' எடுப்பது 'ரஸ்க்' சாப்பிடுவது போல... டிராக்டரில் திக் திக் பயணம் செய்யும் மக்கள்!

ரிஸ்க் எடுப்பது ரஸ்க்  சாப்பிடுவது போல... டிராக்டரில் திக் திக் பயணம் செய்யும் மக்கள்!
X
மொரப்பூர் பகுதிகளில் டிராக்டர்களில் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதனால் விபத்து அபாயம் உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில், அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, கம்பைநல்லூர், ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு கரும்பு மற்றும் மரவள்ளி, தேங்காய் உள்ளிட்ட பொருட்களை சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயிகள் விளைகின்ற தங்களது பொருட்களை, சரக்கு வாகனத்தில் கொண்டு சென்று சந்தைகளில் விற்பனை செய்வது வழக்கம்.

இத்தகைய பொருட்களை எடுத்துச்செல்லும்போது, அளவுக்கதிகமாக சரக்குகளை வாகனங்களில் எடுத்துச் செல்வதோடு, அதன் மீது ஆட்களை அமரச் செய்து ஏற்றிச் செல்கின்றனர். இத்தகைய 'சாகசப் பயணம்' செய்வது காண்போரை பீதிக்குள்ளாகுகிறது.
வளைவில் திரும்பும்போதோ, அல்லது திடீரென பிரேக் பிடிக்கும் போதோ பயணிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் வாய்ப்புகள் உள்ளது. எனவே இது போன்ற பயங்களை செய்ய வேண்டாம் என்று போக்குவரத்து போலீசார் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
எனினும், விவசாயிகள் அதனை கடைப்பிடிக்காமல் இருந்து வருவது கவலை அளிக்கிறது. எனவே, ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுத்து, ரிஸ்க் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி