அரூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

அரூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
X

நெல்மூட்டைகள்.

அரூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் அரூர் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார பகுதிகளில் ஆண்டுதோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபடுகின்றனர். தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக நெல் விளைச்சல் பாதிக்கப்படும் பொழுது கடந்த ஆண்டு சீராக மழை பொழிவு இருந்ததால் நெல் சாகுபடி பரப்பு அதிகமானது. ஆனால் நெல்லுக்கு கட்டுபடியான விலை கிடைக்கவில்லை.

100 கிலோ எடையுள்ள நெல் மூட்டைகளை வியாபாரிகள் ரூபாய் 1,000 முதல் 1,200 வரையிலும் விலைக்கு வாங்குகின்றனர். இதனால் நஷ்டம் ஏற்படுகிறது. அதே நேரத்தில் அரசு சார்பில் இயங்கும் நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகளை கூடுதல் விலை கிடைக்கிறது. எனவே விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்




Tags

Next Story
ai marketing future