விவசாய தோட்டத்தில் மலைப்பாம்பை அசால்ட்டாக பிடித்த விவசாயி

விவசாய தோட்டத்தில் மலைப்பாம்பை அசால்ட்டாக பிடித்த விவசாயி
X

பிடிபட்ட மலைப்பாம்புடன் விவசாயி குடும்பத்தினர்.  

மொரப்பூர் வனவர் சிவக்குமார் தலைமையில் விவசாயி நாகேந்திரனிடம் இருந்த மலைப்பாம்பை மீட்டு காப்புக்காடு பகுதியில் பத்திரமாக விட்டனர்.

தர்மபுரி மாவட்டம்,காரிமங்கலம் வட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள கொரங்கேரி கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன். இவர் விவசாயி. நேற்று மதியம் தனது விவசாய தோட்டத்தில் டிராக்டர் கொண்டு உழவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.அப்பொழுது சாப்பிடுவதற்காக டிராக்டரை நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்று சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து பார்த்த போது டிராக்டரில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்தார். அப்பொழுது லாவகமாக மலைப்பாம்பின் கழுத்தை பிடித்து பாம்பை பிடித்துக்கொண்டார். இச்சம்பவம் குறித்து மொரப்பூர் வனத்துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மொரப்பூர் வனவர் சிவக்குமார் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயி நாகேந்திரனிடம் இருந்த மலைப்பாம்பை மீட்டு மொரப்பூர் காப்புக்காடு பகுதியில் பத்திரமாக விட்டனர். விவசாயின் டிராக்டரில் மலைப்பாம்பு இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags

Next Story
ai in future agriculture