தர்மபுரி அருக வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் டாக்டர், வக்கீல், ஆசிரியர் சிக்கினர்

தர்மபுரி அருக வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் டாக்டர், வக்கீல், ஆசிரியர் சிக்கினர்
X
தர்மபுரி அருகே வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக டாக்டர், அரசு வக்கீல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தருமபுரி மாவட்டம், அரூர் திருவிக நகரை சேர்ந்தவர் குமார். இவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் பணம் பதுக்கி வைத்து, வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக அரூர் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்தையனுக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலை தொடர்ந்து பறக்கும் படையினர் திருவிக நகரில் உள்ள குமார் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆசிரியர் வீட்டில் ரூ.16.50 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி, தருமபுரி மாவட்ட அரசு வழக்கறிஞர் ஆர்.ஆர்.பசுபதி, பல் மருத்துவர் சரவணன், ஆசிரியர் குமார், நேதாஜி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் மற்றும் பல் மருத்துவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். தற்போது, அரசுப்பள்ளி ஆசிரியர் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!