அரூர் பேரூராட்சி தலைவர் பதவி யாருக்கு?: திமுக, அதிமுக இடையே இழுபறி

அரூர் பேரூராட்சி தலைவர் பதவி யாருக்கு?: திமுக, அதிமுக இடையே இழுபறி
X
அரூர் பேரூராட்சியில் திமுக, அதிமுக இரண்டு கட்சியினரும் தலா 7 வார்டுகளை கைப்பற்றியதால் தலைவர் பதவி யாருக்கு என்பதில் இழுபறி

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒரே நகராட்சியான தர்மபுரியை திமுக கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 33 வார்டுகளில் 18 வார் டுகளை திமுக பிடித்துள்ளது. அதிமுக 13, விசி 1, சுயேச்சை 1.

அரூர், கடத்துார், காரிமங்கலம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், மாரண்டஹள்ளி, கம்பைநல்லுார், பி.மல்லப்புரம் ஆகிய 10 பேரூராட்சிகளில் உள்ள 159 வார்டுகளில் 103 வார்டுகளை திமுக கைப்பற்றியுள்ளது.

அதிமுக 22, சுயேச்சை 13, பாமக 11, விசிக 6, தேமுதிக 2, மா.கம்யூ., கட்சி 1, காங்கிரஸ் ஒருவார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.

அரூர் பேரூராட்சி தவிர மற்ற 9 பேரூராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

அரூர் பேரூராட்சியில் திமுகவும் அதிமுகவும் தலா 7 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன. பாமக 2 வார்டுகளிலும் சுயேச்சைகள் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தலைவர் தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது இழுபறியாக உள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil