மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தேர்தல்: அமைதியான வாக்குப் பதிவு
அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் வாக்கு பதிவு மையங்களில் கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் காலியாக உள்ள இடங்களுக்கான தேர்தல் வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெற்றறது. பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவி வார்டு எண் 18க்கான தேர்தலில் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றறனர்.
இந்த வார்டு (எண் 18) எஸ்.டி (பொது) பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் லதா தாமரைச்செல்வன், அதிமுக வேட்பாளர் தீ.கண்ணன், பாமக வேட்பாளர் டி.ஸ்ரீகாந்த், தேமுதிக வேட்பாளர் ஆ.குழந்தை, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.சசிக்குமார், அமமுக வேட்பாளர் மா.ஜெயராமன், சுயேச்சை வேட்பாளர்கள் பி.சாந்தி, மா.ராமன் ஆகிய 8 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றறனர்.
மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வாக்குப் பதிவுகள் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் 13 கிராம ஊராட்சிகளிலும், அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் கொக்கராப்பட்டி, கோபாலபுரம் ஆகிய 2 கிராம ஊராட்சிகளிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் வாக்குப் பதிவு நடைபெற்றறது. நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்றற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதவிக்கான வாக்குகள் வாக்குகள் அக்டோர் 12 ஆம் தேதி பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி, கடத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறுகிறறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu