ஆந்திராவிற்கு செம்மரம் வெட்டச் சென்ற பழங்குடி இன தொழிலாளி மர்மச்சாவு

ஆந்திராவிற்கு செம்மரம் வெட்டச் சென்ற பழங்குடி இன தொழிலாளி மர்மச்சாவு

பைல் படம்.

ஆந்திராவிற்கு சென்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சித்தேரி மலை கிராமத்தில் சுமார் 66 குக்கிராமங்கள் அமைந்துள்ளது.இதில் மிதி காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமன் இவரது மகன் ராமன் வயது 40.

இவர் மற்றும் சித்தேரி உள்ளிட்ட சில கிராமத்தைச் சேர்ந்த சிலர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சித்தேரியில் இருந்து ஆந்திர மாநிலம் கடப்பா பகுதிக்கு செம்மரம் வெட்டச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை ராமன் மர்மமான முறையில் சித்தேரி பஸ் நிறுத்தம் அருகே உள்ள தங்கராஜ் என்பவரின் டைலர் கடை முன்பு உயிரிழந்த நிலையில் அவரது சடலம் போடப்பட்டிருந்தது.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சரவணன் அரூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், அரூர் போலீஸ் டிஎஸ்பி பெனாசிர் பாத்திமா, போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமண தாஸ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சித்தேரியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செம்மரம் வெட்டச் சென்ற இடத்தில் ராமன் அடித்துக் கொலை செய்யப்பட்டு உடலை இங்கு வந்து யாராவது வீசி சென்றார்களா?என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த ராமனுக்கு உண்ணாமலை என்ற மனைவியும் ராமகிருஷ்ணன் வயது 22 .கோகுல கிருஷ்ணன் வயது 14,என்ற இரு மகன்களும் அனிதா வயது 18, என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story